தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர்... ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடக்கும் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள திப்பாலம் கிராமத்தில் ஆபத்தை உணராமல் தரைப் பாலத்தை பொதுமக்கள் கடக்கின்றனர். திப்பாரலம் கிராம ஏரி நிரம்பி இரண்டு மதகுகளில் தண்ணீர் வெளியேறி வருவதால், அங்குள்ள தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டு தண்ணீர் செல்கிறது. இதனால் கிராம மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேறவும் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். இருந்தபோதிலும், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தரை பாலத்தை கடக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story