மக்களுக்கு எச்சரிக்கை..! இனி இதுக்கெல்லாம் ரொம்ப `டிமான்ட்' - "இந்த நிலைமை எப்போ மாறும்"
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை நேற்று விற்கப்பட்ட தக்காளி விலை இன்று 5 ரூபாய் குறைந்து 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் 130 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது.
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகள் விலையும் வழக்கத்தை விட 10 முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது...
1 கிலோ சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், உருளை, வரி கத்திரி, எலுமிச்சை, வெள்ளரி 35 ரூபாய்க்கும்,
ஊட்டி கேரட் 65 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட், முள்ளங்கி, உஜாலா கத்திரி, மாங்காய் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பீன்ஸ் 100 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட் 45 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட், காலிஃப்ளவர் 30 ரூபாய்க்கும், வெண்டை 50 ரூபாய்க்கும்,
பச்சை மிளகாய் 90 ரூபாய்க்கும், பட்டாணி 180 ரூபாய்க்கும், இஞ்சி 200 ரூபாய்க்கும், பூண்டு 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மற்றும் அவரை 80 ரூபாய்க்கும், கருவேப்பிலை 20 ரூபாய்க்கும், தேங்காய் 27 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் காய்கறி விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.