பிரெஷ் ஜூஸ் குடிக்க போறிங்களா..?உஷார்.. கடை முழுக்க எலி சாப்பிட்ட பழங்கள்

x

அக்கினி நட்சத்திரம் அனலாய் தகிக்க... வெயில் காட்டோ காட்டென்று காட்ட... நமது கால்கள் இயல்பாகவே பழச்சாறு கடைகளுக்குள் நுழைவது இயல்பு தான்... அதிலும் விலை கொஞ்சம் மலிவாகக் கிடைக்கிறதென்றால் சொல்லவா வேண்டும்?... அந்தக் கடையில் ஈ போல் மொய்க்க ஆரம்பித்து விடும் மக்கள் கூட்டம்...ஆனால், விலையைக் குறைவாகக் கூறி உயிரையே விலையாய்க் கேட்கின்றன ஒருசில பழச்சாறு கடைகள்...தொடர் புகார்களை அடுத்து சென்னை ஜாஃபர்கான் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்...

உள்ளே சென்ற அதிகாரிகளுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி... துர்நாற்றம் மூச்சு முட்ட வைக்க... "இதைப் போய் மனசாற குடிக்கிறீங்க" என்று அலட்சியமான வாடிக்கையாளர்களை நொந்து கொண்டனர் அதிகாரிகள்...


Next Story

மேலும் செய்திகள்