VR மாலுக்கு அழைத்த ஆண் நண்பர்.. ஆள் இல்லாத இடத்தில் அத்துமீறல் - இந்தியளவில் டிரெண்டான இளம்பெண் ட்வீட்..!
சென்னை அண்ணாநகர் வி ஆர் மாலில், ஆண் நண்பரால் பாதிக்கப்பட்ட விவகாரத்தை, சமூக வலை தளத்தில் பெண் பகிர்ந்த சம்பவம், இந்திய அளவில் வைரலானது.
சமூகவலைத்தளம் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்படவே, சென்னை அண்ணாநகரில் உள்ள வி.ஆர். மாலில், அந்த நபரை, 23 வயதான பெண் ஒருவர் சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது, ஆள் நடமாட்டம் இல்லத சில பகுதிகளில் அந்த நபர் அழைத்துச் சென்று, தவறாக நடக்க முயன்றதாகக் கூறி, சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு, இந்திய அளவில் டிரெண்டானது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூக வலைதள பக்கத்தை ஆய்வு செய்து, குற்றச்சாட்டு தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story