வி.பி.ராமன் சாலை பெயர் பலகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

x

மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலைக்கு, 'வி.பி.ராமன் சாலை' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி.ராமன் வசித்து வந்த சாலைக்கு 'வி.பி.ராமன் சாலை' என பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்