வெடித்துச் சிதறிய பெசிமியானி எரிமலை - மழையாய்ப் பொழிந்த பாறைகள்...திக்...திக்...நிமிடங்கள்...

x

ரஷ்யாவின் Bezymianny பெசிமியானி எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறிய சமயத்தில் அங்கு இருந்து தப்பிப் பிழைத்த கதையை விவரிக்கின்றனர் 2 சாகச வீரர்கள்...

மரணத்தின் வாசல் வரை சென்று வந்ததாகக் கூறக் கேட்டிருப்போம்...

ஆனால் இங்கு உண்மையாகவே இவர்கள் மரண வாயிலின் எல்லைக் கோட்டைத் தொட்டு விட்டு எமனுக்கே டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி வந்துள்ளனர்...

சாகச பிரியர்களான Pyotr Kirinkin பியோட்டர் கிரின்கின்னும், Christina Kurochkina கிறிஸ்டினா குரோச்சினாவும் தான் அந்த அதிர்ஷ்டக்கார ஜோடி...

எரிமலைகளின் புகலிடம் ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்பம்... அங்கு சுமார் 9 ஆயிரத்து 910 அடி உயரத்தில் அமைந்துள்ளது தான் இந்த Bezymianny பெசிமியானி எரிமலை...

எரிமலை ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்து பியோட்டர் மற்றும் கிறிஸ்டினா ஜோடி, எரிமலை பகுதிக்கு சாகச சுற்றுலா சென்றுள்ளனர்..

பெசிமியானி எரிமலையின் செயல்பாடு தீவிரமாவதையும், அது வெடித்துச் சிதறும் என்பதையும் எரிமலை ஆய்வாளர்கள் நன்கு அறிந்திருந்தனர்... ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் அறியாதது... அதுதான் எரிமலை வெடித்துச் சிதறும் நேரம்...

இடையில் ஐந்தே மைல் தொலைவு தான்... சீறத் துவங்கியது பெசிமியானி எரிமலை...

சாம்பலையும் பாறைத் துண்டுகளையும் மழையாய்ப் பொழிந்து கொண்டிருந்தது எரிமலை... இந்தப் பக்கம் போனால் மரணம்... எதிர்த்திசையில் வாழ்க்கை தப்பிக்கச் சொல்லி கூக்குரலிடுகிறது...

சாம்பல் விழுந்தால் சேதாரமில்லை... நெருப்புப் பாறை விழுந்தால் அடுத்த நொடி சாம்பல் தான்...

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு பைக்கை விரட்டிக் கொண்டு ஓட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்களும், பியோட்டர் மற்றும் கிறிஸ்டினா ஜோடியும்...

எது எப்படியோ வல்கனோ திரைப்படத்தில் வருவதைப் போல திகிலான பயணத்தைக் கடந்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்த நிம்மதியை அவர்கள் முகத்தில் காண முடிந்தது...


Next Story

மேலும் செய்திகள்