100 வது வாரத்தை எட்ட உள்ள மனதின் குரல் நிகழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்

x

வானொலி மற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டின் வலிமை மற்றும் நாட்டு மக்களின் கூட்டு சக்தியுடன் இணைந்து இருக்க முடிகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம், மேகாலயா, நாகலாந்து, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வானொலி பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வரும் வாரத்தில் மனதின் குரல் நிகழ்ச்சி 100 வது வாரத்தை எட்ட உள்ளதாகவும், வானொலி தொகுப்பாளர் என்ற முறையில் வானொலியுடன் உறவு கொண்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தை ஜனநாயகபடுத்த தங்களின் அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்த பிரதமர், நாட்டு மக்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பு வானொலி மூலமாக மட்டுமே சாத்தியம் என தெரிவித்தார். வலிமையுடனும் நாட்டு மக்களின் கூட்டு சக்தியுடன் தன்னால் இணைந்திருக்க முடிவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்