விசாகம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய தலம்.. விரலி மஞ்சள் மாலை அணிவித்தால் திருமண தடை நீங்கும் - கபிஸ்தலம் கஜேந்திர பெருமாள் கோயிலின் சிறப்புகள்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கபிஸ்தலம் கஜேந்திர பெருமாள் கோயிலின் சிறப்புகளை தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்...
அனைவரையும் சமமாக பாவிக்கும் குணம் கொண்டவர்களாகவும்..பிடித்த காரியங்களை அடம் பிடித்தாவது செய்து முடிக்கும் குணம் கொண்டவர்கள் விசாகம் நட்சத்திரகாரர்கள்...
விசாக நட்சத்திரத்திற்கு அதிபதி குரு பகவான்...
முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கோயிலாக இருக்கிறது தஞ்சை மாவட்டம் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில்.
இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் ஏகாதசி தோறும் விரதத்துடன் கூடிய தவம் இருப்பது வழக்கம்...
அவ்வாறு தவம் இருக்கும் சமயத்தில் அகத்திய முனிவர் தன் சீடர்களுடன் மன்னனை காண அங்கு வரவே தவத்தில் இருந்த பாண்டிய மன்னன் அதை கவனிக்கவில்லை...
இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் மன்னரை யானையாக அதாவது கஜேந்திரனாக மாறும்படி சாபம் கொடுத்தார்...
சாபம் தீர தினமும் இறைவனுக்கு தாமரை மலரால் பூஜை செய்ய பலன் பெறலாம் என்றிருக்கிறார் அகத்திய முனிவர்..
அதேபோல கந்தர்வன் குளத்தில் குளித்து கொண்டிருந்த காசிப முனிவரின் காலை பிடித்து இழுக்கவே கோபம் கொண்ட முனிவர் அவரை முதலையாக மாறும் படி சாபமிட்டார்..
அதனால் குளத்தில் முதலை உருவில் இருந்த கந்தர்வன், ஒருமுறை சுவாமிக்கு பூஜை செய்ய தாமரை மலர் எடுக்க யானை வடிவில் இருந்த கஜேந்திரன் வந்திருக்கிறார்.
அப்போது கஜேந்திரனின் காலை கடித்து குளத்திற்குள் இழுக்கவே முதலையின் பிடியிலிருந்து யானை தப்பிக்க போராடி கொண்டிருந்தது...
அச்சமயத்தில் கஜேந்திரன் பெருமாளை நினைத்து ஆதிமூலமே என அழைக்கவே ஸ்ரீமன் நாராயணன் சங்கு சக்ரதாரியாக கருடன் மீது விரைந்து வந்து ....
தன் சக்ராயுதத்தால் முதலையை சம்ஹாரம் செய்தார்.. அப்போது முனிவரின் சாபம் நீங்க பெற்ற முதலை கந்தர்வனாக மாறியதோடு, கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்சம் அளித்து தன்னுடன் ஐக்கிய படுத்திக் கொண்டாராம்..
தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தல இறைவன் மோட்சம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது...
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து 27 தீபம் ஏற்றி, பெயர் , நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து 27 முறை ஆலயத்தை சுற்றி வந்து வணங்கினால் அல்லவை யாவும் நீங்கி நல்லவை கிடைக்கப்பெறும்...
வாழ்நாளின் இறுதிகட்டத்தில் இருக்கும் விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்...
36 விரலி மஞ்சளை கட்டி இங்குள்ள தாயாருக்கு மாலையாக அணிவித்தால் திருமண தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிபதியான குரு பகவானுக்கு ஹோமம் செய்து வழிபட தொழில், வியாபாராம் விருத்தி அடையும்...
செவ்வாய் மற்றும் சஷ்டி தினங்களில் முருகப் பெருமானை வழிபடுவதும் காரிய நிவர்த்தியை தரும்...
இக்கோயிலில் மூலவராக கஜேந்திர பெருமாளும், தாயார் ரமாமணி வல்லியாகவும் அருள் பாலிக்கின்றனர்...
கோயிலானது காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்...
திருவையாறில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவும், கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவும், பயணித்தால் கோயிலை வந்தடையலாம்....
அனுஷம் நட்சத்திரகாரர்களுக்கான கோயிலையும், அதன் சிறப்புகளையும் நாளை பார்க்கலாம்...