ஆசையாக அக்கா குழந்தையை காண சென்ற தம்பியை பிணமாக அனுப்பிய மாமா- விருதுநகரில் நடந்த பயங்கரம்

x

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, வாக்குவாதத்தின்போது மனைவியின் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சுழி அருகே ஆலடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர், தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு சென்று, அவருடைய குழந்தையுடன் விளையாடியுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சகோதரியின் கணவர் காமராஜ் என்பவர், பொன்ராஜிடம் இருந்து குழந்தையை பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது காமராஜ், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து பொன்ராஜை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை வழக்குப்பதிவு செய்த போலீாசார், தலைமறைவான காமராஜை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்