“ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டாங்க...“ வைரலான திமுக எம்.எல்.ஏ ஆடியோ
காரைக்கால் அருகே அரசு உதவித்தொகை பெற லஞ்சம் கேட்கப்படுவதாக புகார் கூறிய நபரை நேரடியாக தொடர்புகொண்ட திமுக எம்எல்ஏ, லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் ஊழியப்பத்து பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை உள்ளிட்டவற்றை பெறுவதற்கு சிலர் லஞ்சம் கேட்பதாக வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். இந்தநிலையில் அவரை தொடர்புகொண்ட திருப்பட்டினம் தொகுதி திமுக எம்.எல்.ஏ நாக தியாகராஜன், லஞ்சம் கேட்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டறிந்ததோடு, லஞ்சம் கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதுதொடர்பான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Next Story