மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை... மோடி எடுத்த திடீர் ஆக்ஷன்

x

நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, அனைத்துக் கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் நலனுக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி. தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பாதுகாப்பு தரவுகள் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட இருப்பதாகக் தெரிவித்தார்.

இயன்ற அளவுக்கு பல்வேறு விவாதங்களை நடத்த தயாராக இருப்பதாகவும்,

அனைவரும் ஒன்றாக இணைந்து விவாதிக்கும்போது அதனுடைய பயன்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் சமூகத்திற்கு வெட்கக்கேட்டை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த பிரதமர்,

அந்த சம்பவம் இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களையும் வெட்கத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும்,

கோபத்திலும் வேதனையிலும் தனது மனம் நிறைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் என தெரிவித்த பிரதமர்,

சட்டம் முழு வலிமையுடன் தன் கடமையை செய்யும் என்றும் கூறினார்.

பெண்களின் பாதுகாப்பிற்காக சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை பலப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுக் கொள்வதாகவும்,

பெண்களின் பாதுகாப்பிற்காக வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தெரிவித்தார்.

மக்கள் நலனுக்கான வாய்ப்பை பயன்படுத்தி பொறுப்புகளை எம்.பி.க்கள் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை

டிஜிட்டல் பாதுகாப்பு தரவுகள் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளன

இயன்ற அளவுக்கு பல்வேறு விவாதங்களை நடத்த தயார்

அனைவரும் ஒன்றாக இணைந்து விவாதிக்கும்போது பயன்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கும்

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் சமூகத்திற்கு வெட்கக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களையும் வெட்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது

வேதனையிலும் எனது மனம் நிறைந்துள்ளது

மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம்

சட்டம் முழு வலிமையுடன் தன் கடமையை செய்யும்

பெண்களின் பாதுகாப்பிற்காக சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும்

பெண்களின் பாதுகாப்பிற்காக வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்