இங்கிலாந்தில் இந்திய சமூகத்திற்கு எதிராக வன்முறை.. இந்திய தூதரகம் கண்டனம்

x

லண்டன் லீசெஸ்டரில் இந்திய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் லீசெஸ்டர் ஷையரில் ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது.

கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர். இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, லீசெஸ்டர்ஷைர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை,15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் லீசெஸ்டரில் இந்திய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி லண்டன் அதிகாரிகளுக்கு வலுவாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்