விளை நிலங்களில் வீட்டு மனைகள்- "அனுமதி உள்ளதா? உறுதி செய்து கொள்ளுங்கள்" - மாவட்ட ஆட்சியர் அட்வைஸ்

x

நீலகிரி மாவட்டத்தில் வீட்டு மனைகளுக்கு முறையான அனுமதி உள்ளதா? என்பதை உறுதி செய்த பின் மனைகளை வாங்குமாறு பொது மக்களுக்கு ஆட்சியர் அம்ரித் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் அனுமதியற்ற கட்ட‌ட‌ங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான கட்டிடக்குழுக் கூட்டத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட ஆயிரத்து 207 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். விதிகளை மீறி வரைபடம் தயாரிக்கும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 345 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த இருவரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி 345 சவரன் தங்க நகைகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த், அபிலேஷ் என்பதும், பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்து வருவதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். எலச்சிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் லோகநாதனை கைது செய்து சிறையில் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்