அதிர வைத்த அன்புஜோதி ஆசிரம விவகாரம் "தந்தி செய்தியை பார்த்து தான் ஓடி வந்தோம்" - தாயை மீட்டு வீட்டிற்கு சென்ற மகன்
- விழுப்புரம், அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டவர்களில், ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டனர்.
- விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் பலர் காணாமல் போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பத்மா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது மகன் அருன்குமார் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்த்திருந்தார்.
- இந்நிலையில், தனது தாயார் பத்மாவை காணவில்லை என கெடார் காவல் நிலையத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அருன்குமார் புகாரளித்தார்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் பத்மா தங்க வைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள ஊழியர்கள் மீட்டு அவரை விழுப்புரம் அழைத்து வந்து கெடார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- இதையடுத்து, போலீசார் அருன்குமரை அழைத்து அவரது தாயாரை அனுப்பி வைத்தனர்.
Next Story