ஆசிரமத்தில் திடீரென மாயமான மனநலம் குன்றியோர் - விசாரணையில் வெளியான பகீர் பின்னணி அதிர்ந்து போன போலீசார்…
- விழுப்புரம் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த ஆசிரமத்தில், மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காணாமல் போன விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
- இதில், மனநலம் பாதிப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் என 150 க்கும் மேற்பட்டோர் தங்கி வந்துள்ளனர்.
- இந்நிலையில், இந்த ஆசிரமத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிலர் காணாமல் போயுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
- இதனடிப்படையில், ஆசிரமத்தில் விசாரணை செய்த போலீசாருக்கு 16 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதும், ஆசிரமம் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
- இதையடுத்து, ஆசிரமத்தில் இருப்பவர்களை மீட்ட போலீசார் அவர்களை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
- இதையடுத்து, அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவித்த போலீசார், விசாரணை முடியும் வரை ஆசிரமம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையின் கீழ் செயல்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story