திடீரென அதிகரித்த கடல் சீற்றம்! -ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்த படகு... தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள்
மரக்காணம் அருகே கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீனவர்கள், மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியபோது, கடல் சீற்றம் காரணமாக இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி கடலில் கவிழ்ந்துள்ளது. இதை கண்ட சக மீனவர்கள், கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் மீட்டனர்.
Next Story