பட்டாசாய் வெடித்த விஜய் சங்கர்.. மிரட்டிய மேட்ச் கில்லர் மில்லர் - KKR-ஐ அசால்ட் செய்த குஜராத்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில், கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 179 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிகபட்சமாக குர்பாஸ், 39 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி, அதிரடியாக ரன்களை குவித்தது. சுப்மன் கில் 49 ரன்கள் எடுத்த நிலையில், விஜய் சங்கர் 24 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். மில்லர் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க, குஜராத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டியது.
Next Story