கேஸில் சிக்கிய விஜய் தேவரகொண்டா - தீவிர விசாரணைக்கு பின் பரபரப்பு பேட்டி

x

லைகர் பட விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.லைகர் படம் தயாரிக்க ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர்களான இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அதன் நீட்சியாக அப்படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு பேசிய விஜய் தேவரகொண்டா, "பிரபலமாக இருப்பதால் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்" என்றும், "இதுவும் ஒரு அனுபவம்" எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்