போலீஸ் காவலில் உயிரிழந்த விக்னேஷ்... வழக்கை CBI-க்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு

x

விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியமைக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவில் வாகன சோதனையின்போது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், போலீஸ் விசாரணையில் அவர் மரணம் அடைந்தது தொடர்பாக கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், விசாரணை முறையாக நடத்தப்படுவதாக சிபிசிஐடி போலீசார் ஆட்சேபனை தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது, ஆதாரங்களைக் கைப்பற்றியது ஆகியவற்றைக் குறிப்பிட்டு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்