அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

x

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக எழுந்த மோசடி புகாரில், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான சம்மன் ரத்துக்கு எதிரான, அமலாக்கத் துறை மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இது தொடர்பாக சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அமலாக்கத் துறை சார்பில் ஏற்கனவே வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 2-ஆம் தேதி தள்ளி வைத்தது. இந்நிலையில், இந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகிறது.



Next Story

மேலும் செய்திகள்