வேங்கைவயல் வழக்கு - 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில், 2வது கட்டமாக 10 பேருக்கு, டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட உள்ளது
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக, கடந்த வாரம் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுப்பதற்காக அழைப்பானை அனுப்பி இருந்தனர். ஆனால் அதில் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட நிலையில், 11 பேர் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், 2வது காட்டமாக புதிதாக 10 பேருக்கு, டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் சிபிசிஐடி உத்தரவு பெற்றிருந்தது. அதன்படி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேருக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
Next Story