குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - மாவட்ட எஸ்.பி.க்கு பறந்த நோட்டீஸ்
- வேங்கைவயல் சம்பவத்தில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
- இந்நிலையில், இளமுருகு முத்து என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி.க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Next Story