காதல் ரெமோவின் முரட்டு திட்டம்.. முட்டுக்கட்டை போட்ட மனைவி..! | Vellore | Police

x

வேலூரில் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த கணவர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக இளம்பெண் ஒருவர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சில்பா. இவர் குடியாத்தம் அருகே உள்ள சேத்துவண்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2020ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணம், நகைகள், பாத்திரங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே இருவரும் வாழ்ந்த நிலையில் வரதட்சணையாக கூடுதல் பணம் கேட்டு சுரேஷ் கிருஷ்ணா தரப்பில் சில்பாவுக்கு தொல்லை தந்து வீட்டை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. மேலும் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணமானதும் உறுதியான நிலையில் கொதித்துப் போன சில்பா, உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தற்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய சுரேஷ்கிருஷ்ணா திட்டமிட்டு இருப்பதாகவும், தன்னை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்