திடீரென தீக்குளிக்க முயன்ற பெண்..! போலீசின் காலில் விழுந்து கெஞ்சல் - வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
- பாகாயம் அடுத்த சஞ்சீவிராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராமு-செல்வி தம்பதியரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், இளைஞர் ஒருவருடன் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
- இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செல்வி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர்.
- இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தார்.
- அதன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
Next Story