தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் - ஸ்தம்பித்த செங்கல்பட்டு

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மாவட்ட எல்லையான சென்னை To திருச்சி ஓங்கூர் பாலம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. 24 மணி நேரமும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தேசிய நெடுஞ்சாலையை ஒரு வழி சாலையாக மாற்றி வாகனங்கள் இயக்கப்பட்டன. 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தென் மாவட்டத்திற்கு அதிகப்படியான வாகனங்கள் இயக்கபடும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோமீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுபட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்