"பகுத்தறிவு பாலால்தான் 90 வயதிலிதும் இளமையாக உள்ளார்" -கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பகுத்தறிவு பால் அருந்தியதால் தான் 90 வயதிலும் இளமையாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆவது பிறந்தாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்பட்டது.
மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கி.வீரமணி நலமாக இருந்ததால்தான் முதல்வர் பலமாக இருப்பார் என்றார்.
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ் மொழியை வைத்து பிரதமர் மோடி நாடகம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
முதல்வர் பதவியை பிடிப்பதைவிட, கோயில் கருவறைக்குள் செல்வதே வெற்றி என்று விசிக தலைவர் திருமாவளவன், தனது பிறந்தநாளின் போதும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கி.வீரமணி எச்சரித்தாக கூறினார்.
பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கம் என்பது கட்சி அல்ல, கொள்கை இயக்கம் என்றார்.
ஆசிரியர் வீரமணி பகுத்தறிவு பால் குடித்ததாக அண்ணா கூறியதை நினைவு கூர்ந்த முதலமைச்சர், பகுத்தறிவு பால் குடித்ததால் தான் 90 வயதிலும் இளமையாக இருப்பதாக புகழாரம் சூட்டினார்