அடிக்கடி செல்போனில் பேசிய மனைவி... கண்டித்தும் கேட்காததால் அடித்து கொலை...
11 வருஷம் தாலிகட்டி வாழ்ந்து, இரண்டு குழந்தைகளை பெத்து குடுத்த மனைவியையே கணவன் கொடூரமா அடிச்சி கொன்னுருக்காரு... அந்த கொடூர கொலைக்கான காரணம் செல்போனு சொன்னா உங்களா நம்பமுடியுதா?
இப்படி ஒரு பயங்கரம் நடக்கும் என்று அங்கிருந்த யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்..
சதாரண கணவன் மனைவி சண்டை ஒரு கொடூர கொலையில் முடிந்திருக்கிறது.
நடந்த கொலைக்கு காரணம் செல்போன்..
கொல்லப்பட்டவர் மீனா. வேதாரண்யம் அடுத்துள்ள, தகட்டூர் பெத்தாச்சிக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
11 வருட மண வாழ்கைக்கு சாட்சியாக இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுரேஷூக்கு சொந்தமாக கார் உள்ளது. சென்னையில் கார் ஓட்டி வந்திருக்கிறார்.
அழகான மனைவி, அன்பான பிள்ளைகள் என சுரேஷ், மீனாவின் குடும்ப வாழ்கை மகிழ்சியாக கழிந்திருக்கிறது. ஆனால் கடந்த 6 மாதங்களாக இவர்களது குடும்ப வாழ்கையில் சந்தேக புயல் வீச தொடங்கியிருக்கிறது. அது தான் இந்த கொலைக்கான தொடக்கபுள்ளி.
சென்னையிலிருந்து சுரேஷ் வீட்டுக்கு வரும் போதெல்லாம், மீனா செல்போனோடு அதிகம் புழங்குவதை கவனித்திருக்கிறார். அவரின் உரையாடல் பல மணி நேரம் செல்போனில் நீண்டிருக்கிறது. இதனால் கடுப்பான சுரேஷ் மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் மீனா அதையெல்லாம் காதில் வாங்கி கொண்டதாக இல்லை.
சமீபத்தில் ஒரு நாள் மீனாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. எதிர் முனையில் ஒரு ஆண் பேசியிருக்கிறார். இத்தனை நாட்களாக அரசல்புரசலாக கேட்டு வந்த விஷயம் சுரேஷூக்கு அப்போது தான் உறுதியாகியிருக்கிறது.
ஆம்... மீனா செல்போன் கடைகாரர் ஒருவரோடு அடிக்கடி பேசுவதாக ஊருக்குள் ஒரு பேச்சு உலா வந்ததாக சொல்லப்படுகிறது.
சுரேஷூக்கு மனைவி மீது ஆத்திரம் அதிகரித்திருக்கிறது. மனைவியை கண்டித்திருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்று மீனா மீண்டும் செல்போனுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறார். இதை பார்த்ததும் கடுப்பான சுரேஷ் ஆத்திரத்தில் செல்போனை பிடுங்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாகியிருக்கிறது.
நடந்த களேபரத்தில் சுரேஷ், கூரான தேங்க உரிக்குற பாறையால், மீனாவை கொலைவெறியோடு தாக்கியிருக்கிறார்.
மீனாவின் முகம், மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், மீனாவை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். ஆனால் பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷை, வாய்மேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
மீனாவும் இறந்துவிட, சுரேஷூம் சிறையில் கம்பி எண்ண அவர்களது இரண்டு குழந்தைகளும் இன்று நிர்கதியா நிற்கின்றனர்.
மீனாவின் தவறான பழக்கம் அவரை மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்தையுமே சிதைத்து போட்டிருக்கிறது.