பட்டப்பகலில் விசிக பிரமுகர் துடிதுடிக்க வெட்டிக்கொலை... வசமாக சிக்கிய கும்பல் - சென்னை போலீசார் அதிரடி
சென்னையில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் காரில் வந்து முகமூடி அணிந்து வந்து விசிக பிரமுகரை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கே கே நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்ற குட்டி ரமேஷ். இவருக்கு கீதா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட எட்டு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.அண்மைகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் ரமேஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கே கே நகர் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்ந நிலையில் காலை 8 மணி அளவில் கேகே நகர் பாரதிதாசன் சாலையில் சாலையில் உள்ள வழக்கமான டீக்கடையில் டீ குடிக்க சென்று இருக்கிறார். அப்போது முகமூடி அணிந்து காரில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக ரமேஷை வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராகேஷ், தனசேகரன், தினேஷ், செந்தில்குமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.