அர்ஜூன் சம்பத்தை கைது செய்யக்கோரி விசிகவினர் போராட்டம் - காவல்துறை பாதுகாப்போடு சென்ற அர்ஜுன் சம்பத்

x

சென்னையில் போலீஸ் பாதுகாப்போடு அம்பேத்கருக்கு அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்திய நிலையில், அவர் மீது காலணிகளை வீசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

அம்பேத்கர் காவி சட்டை அணிந்து, நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்திருப்பது போன்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சென்னையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு சென்ற அர்ஜுன் சம்பத், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அர்ஜுன் சம்பத் மீது விடுதலை சிறுத்தை கட்சியினர் செருப்பு, வாட்டர் பாட்டில்களை வீசி தாக்க முற்பட்டனர்.

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உட்பட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்