'வாரிசு' டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி குவித்த அமைச்சர்கள், MLA-க்கள் - புதுவை முதல்வருக்கு பறந்த புகார்..!
புதுச்சேரியில் வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மொத்தமாக வாங்கிவிட்டதாக நடிகர் விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் மன்றத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்ததையடுத்து விஜய் ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
Next Story