புதுக்கோட்டை அருகே காரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
- புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
- இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயா ரவி வர்மா மற்றும் அவரது நண்பர்கள் கணேசன் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
- தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story