பெருசுகள் முதல் இளசுகள் வரை.. கிறங்கடித்த மேஜிக் கவிஞன்.. தலைமுறை தாண்டி தடம்பதித்த வாலிபன்..!
வாலி ஒருவரால் மட்டும் தான் வெளிநாடுகளுக்கே செல்லாமல் நியூயார்க் நகரின் அமைதியையும்... மிஸ்ஸிசிபி நதியின் அழகையும் தனது பாடல்களில் வர்ணிக்க முடியும்.
தனது ஒற்றை பாடல் மூலம் சச்சின், டயானா-சார்லஸ், பின்லேடன் வரை நமக்கு விளக்கிவிடுவதோடு, ஹாலிவுட் வரை நம்மை அழைத்தும் சென்றுவிடுவார்.
இன்றும் கல்லூரி செல்லும் இளைஞர்களையும் பெண்களையும் முணுமுணுக்க வைப்பது வாலியின் பாடல்கள் தான். Break the rules என்று சொல்லியவராயிற்றே நம் வாலி.
கொண்டாட வைப்பதும் வாலி பாடல்கள் தான்..!
வலிமை சேர்க்கும் வரிகளை கொடுத்த வாலி.. வெற்றிக்கான மந்திரத்தையும் கொடுத்துவிட்டார்.
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு... முக்காலா முக்காலா.. ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றாதே என 90ஸ் கிட்ஸை ஆட்டம் போட வைத்தவரும் வாலி எழுதிய பாடல்கள் தான்.
அதே 90ஸ் கிட்ஸை காதலிக்காமலேயே காதல் தோல்வியை உணர செய்ததும் இவரது பாடல்கள் தான்.
இன்றைய காதலை அன்றே கணித்தவர் வாலி
தலைமுறை தாண்டி தடம் பதித்த கவிஞர் வாலியினை திரையுலக பயணத்தை பார்க்கலாம்ஆனால் அதே இளைஞர்களுக்கு காதலின் ஆழத்தையும்... முதுமை காதலையும் உணர்த்த தவறவில்லை அவர்.