வைகாசி விசாக திருவிழா - முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள்..காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

வைகாசி விசாகத்தை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
x

வைகாசி விசாகத்தை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாகத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவில் பங்கேற்க 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து முருகனை தரிசித்தனர்.

இதே போல், பழனி தண்டாயுதபாணி கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், 3 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசித்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து

கிரிவலப் பாதையில் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

சிவகாசியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு குழந்தை வேலன் காவடி திருவிழா நடைபெற்றது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து, நகரில் உள்ள கோயில்களில் வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்