தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மறைந்த தினம் இன்று

x
  • 1855 பிப்ரவரியில், தஞ்சை மாவட்டம் சூரியமூலை கிராமத்தில் பிறந்த உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடம் கற்றார். பின்னர் தன் 17ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர்ச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.
  • ஓலைச் சுவடிகளை தேடி பல ஊர்களுக்கு நடந்தே சென்று, அரும்பாடுபட்டு சேகரித்தார். சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், பத்துப் பாட்டு உள்ளிட்ட ஏராளமான சங்க இலங்கியங்களை அழிவில் இருந்து காப்பாற்றி, பெரும் சாதனை படைத்தார். ஓலைச்சுவடிகளை கவனமாக பிரதியெடுத்து, அவற்றில் காணப்பட்ட பிழைகளை பல ஆராய்ச்சிகள் மூலம் திருத்தம் செய்து பதிப்பித்தார்.
  • சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது, அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.
  • பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப்பணியானது அவர் தனது 87ஆம் வயதில் காலாமாகும் வரை தொடர்ந்தது. சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
  • தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி 1932இல் சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் அளித்தது. தமிழ் தாத்தா என்று புகழப்படும் உ.வே.சா, 87ஆம் வயதில், உடல்நலக் குறைவு காரணமாக காலாமான தினம், 1942 ஏப்ரல் 28.

Next Story

மேலும் செய்திகள்