செல்போன் திருடியதற்காக உயிரை பறித்த கொடூரம் - ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம் - அதிர்ச்சி காட்சிகள்

x

செல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை, கடுமையாக தாக்கி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று உத்திர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் உள்ள தில்ஹர் ரயில் நிலையத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டது. அந்நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்நபரை கடுமையாக தாக்கி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அயோத்தியா கான்ட் ஓல்டு டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த நரேந்திர துபே என்பவர், அந்நபரை கொடூரமாக தாக்குகிறார். செல்போன் திருடியதாக் கூறி அந்நபரை தாக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து அந்நபரை வெளியே தள்ளி விடுகிறார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் பரேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மரணமடைந்த நபர் குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்