"வீட்டிற்கு முன்பு கடை வைத்ததால் ஆத்திரம்" - தெருவோர கடைகளை சூறையாடி பெண் மருத்துவர் வெறிச்செயல்
உத்தர பிரதேசத்தில் சாலையோர கடைகளில் உள்ள மண்பாண்ட பொருட்களை அடித்து நொறுக்கிய பெண் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள கோமதி நகரில் ஆவேசமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த மண்பாண்ட விளக்குகள் மற்றும் பொருட்களை அந்த பெண் அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த வியாபாரிகளின் தலையில் தண்ணீரை ஊற்றி, அவர்களை விரட்டினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண், மருத்துவர் அன்ஜு மவுரியா என்பதும் தன் வீட்டின் முன்பு கடை போட்டதால் ஆத்திரமடைந்த அவர் இவ்வாறு செயல்பட்டும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story