"குடியால் தான் என் மகன் இறந்தான்.. தயவுசெய்து அந்த பழக்கத்தை விடுங்க" - மத்திய அமைச்சர் உருக்கம்

குடிகார அதிகாரியை திருமணம் செய்வதை விட குடி பழக்கம் இல்லாத ரிக்‌ஷாகார‌ர் மேல் என பெண்களுக்கு மத்திய அமைச்சர் குவுஷல் கிஷோர் அறிவுரை வழங்கியுள்ளார்
x

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லம்புவா தொகுதியில் நடைபெற்ற போதை மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிரான கூட்டத்தில் பேசிய அவர், தனது மகன் போதைப் பழகத்தால் அடிமையானதாக குறிப்பிட்டார். திருமணம் முடிந்து 2 வயதில் குழ்ந்தை இருந்த போது, குடிக்கு அடிமையானதால் தனது மகன் இறந்து விட்டதாகவும் தனது மருமகள் விதவையாகி விட்டதாகவும் உருக்கமாக கூறினார். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஆயுட்காலம் குறைவு என்றும், குடிகார அதிகாரியை மணப்பதை விட, குடி பழக்கம் இல்லாத ரிக்‌ஷாகார‌ரை மணப்பதே மேல் என்றும் தெரிவித்தார். தற்போது ஆண்டுக்கு 2 லட்சம் பேர் போதைப்பழக்கத்தால் உயிரிழப்பதாகவும் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் குவுஷல் கிஷோர் கேட்டுக் கொண்டார்.

==


Next Story

மேலும் செய்திகள்