"கண் சொட்டு மருந்தால் 3 பேர் பலி.. 8 பேர் பார்வை பறிபோனது" - சென்னை நிறுவன மருந்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு

x

சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் பார்வை பறிபோனதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருப்பது, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • சென்னையை சேர்ந்த குலோபர் பார்மா ஹெல்த் கேர் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்திய மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 8 பேரின் கண்பார்வை பறிபோனதாகவும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முன்வைத்துள்ளது.
  • ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது இதே போன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு இருமல் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்திருந்தது.
  • இந்நிலையில், தற்போது கண்பார்வை பறிபோக காரணமான சொடு மருந்து தயாரிப்பை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியிருப்பது, இந்திய சுகாதாரத்துறைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்