அமெரிக்கா மீது பறந்த சீனா உளவு பலூன்.. விமானப் படை செய்த பயங்கர செயல்
அமெரிக்காவின் வட கரோலினாவில் சந்தேகத்திற்கிடமாக பறந்த சீன உளவு பலூனை விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
கடந்த வாரம் மோன்டனா மாகாணத்தில் பலூன் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் உறுதி செய்திருந்தது.
இந்நிலையில், வட கரோலினாவில் உள்ள கார்லோட் பகுதியில், ராணுவ தளவாடம் உள்ள இடத்திற்கு மேல் பலூன் பறந்துள்ளது.
அதனை விமானப்படை சுட்டு வீழ்த்தியது. கடலில் விழுந்த பாகங்களை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 3 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story