"கைலாசா நாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா" - "இனி யாரும் என்ன அசைக்க முடியாது" -நித்தி ஆட்டம் ஆரம்பம்
நித்தியானந்தாவின் கைலாசா நாட்டை அமெரிக்காவின் நெவார்க் நகரம் இறையாண்மை பெற்ற நாடாக அறிவித்ததோடு இருநாட்டு வளர்ச்சிக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது...
நித்தியானந்தாவின் கைலாசா இணையத்தில் மட்டுமே பேசு பொருளாக உள்ள நிலையில் வேலை வாய்ப்பு, சத்சங்கம் என எப்போதும் அந்த நாட்டின் இணையதளம் பரபரப்பாகவே இருக்கும்.. இந்த சூழலில் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்திருக்கும் நெவார்க் நகரமானது, இருநாட்டு வளர்ச்சி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கைலாசா நாட்டின் சார்பில் அந்நாட்டின் தூதுவர் விஜயப்ரியா நித்தியானந்தாவும், நெவார்க் நகர மேயரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில் இதன் நகலை கைலாசா அதன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.