கன்னியாகுமரியில் விமரிசையாக நடைபெற்ற உறியடி நிகழ்ச்சி | கண்டு ரசித்த ஐயப்ப பக்தர்கள் | KANYAKUMARI

x

கன்னியாகுமரி அருகே, திக்குறிச்சி தர்ம சாஸ்தா கோயிலில் உறியடி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வீடு வீடாக சென்று பஜனை பாடல்களை பாடி வரும் ஐயப்ப பக்தர்கள், பஜனை முடிவாக பஜனை பட்டாபிஷேக ஊர்வலம் நடத்திய பின் உறியடி நிகழ்சி நடத்துவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக திக்குறிச்சி தர்ம சாஸ்தா கோயிலில் பட்டாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது. இதில் கண்ணன் வேடமணிந்த இளைஞர்களும், சிறுவர்களும் சிறுவயதில் கண்ணன் வெண்ணை திருடியது முதல் செய்த சேட்டைகள் மற்றும் 64 கலைகளில் பல கலைகளை நடித்து காட்டினர். தொடர்ந்து அந்தரத்தில் பறக்கவிடபட்ட வெண்ணை நிரப்பப்பட்ட உறியை கண்ணன் வேடமணிந்த இளைஞர்கள் பிடிக்க, அந்த வெண்ணையால் கண்ண பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வை, தமிழகம் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர்


Next Story

மேலும் செய்திகள்