நீதிமன்ற திறப்பு விழாவில் எம்.பி செல்வராஜ்,எம்.எல்.ஏ மாரிமுத்துவுக்கு இடம் ஒதுக்காததால் சலசலப்பு

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புதிய சார்பு நீதிமன்ற திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக விழாவிற்காக இருக்கைகள் போடப்பட்டதில், நாகை எம்.பி செல்வராஜ், மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவுக்கு இடம் ஒதுக்கப்படாததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய நிலையில், வழக்கறிஞர்கள் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்