அடிதூள்..! இனி சிங்கப்பூருக்கு UPI மூலம் பணம் அனுப்பலாம் ஈஸியா... புதிய திட்டத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

x
  • டிஜிட்டல் திட்டங்கள், நாட்டு மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • இந்தியா -சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தப் பணப் பரிமாற்றம் முறை இணைப்பு சேவை இரு நாட்டு மக்களுக்கு கிடைத்த பரிசு என்றார்.
  • இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான நட்பு மிகப் பழமையானது எனவும் சோதனையான காலகட்டத்திலும் துணை நின்றதாகவும் கூறினார்.
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகித்ததோடு உதவியாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்