கோவையில் அசாதாரண சூழல்.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு
பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை தொடர்ந்து, கோவை மாநகர உளவுப் பிரிவு மற்றும் சிறப்பு உளவு பிரிவுக்கான புதிய உதவி ஆணையர்களை டிஜிபி சைலேந்திர பாபு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் கோவை பரபரப்பான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோவை மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஆயுதம் ஏந்திய போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார். இந்நிலையில், கோவை மாநகர சிறப்பு உளவு பிரிவு உதவி ஆணையர் பார்த்திபன், மாநகர உளவுப் பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் அருண், சிறப்பு உளவு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story