சபரிமலையில் வரலாறு காணாத வருமானம்.. மலை போல் குவிக்கப்பட்ட நாணயங்கள்
சபரிமலையில், இந்தாண்டு ஐயப்ப சீசன் வருவாயாக 360 கோடி ரூபாய் கிடைத்துள்ளது..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்து முடிந்த மண்டல பூஜை மற்றும், மகரவிளக்கு கால பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் இம்முறை கோயில் வருமானம் அதிகரித்தது. இதுவரை கிடைத்த மொத்த வருமானம் 360 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த நாணயங்களை, 3 அறைகளில் 520 ஊழியர்கள் எண்ணி முடித்துள்ளனர்.
நாணயங்களில் மட்டுமே 10 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
சபரிமலை கோயில் வரலாற்றில் மண்டல, மகரவிளக்கு சீசனில், வருமானம் 300 கோடியை தாண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story