"அனுமதியின்றி மரங்களை வெட்டினால் சட்ட விரோத நடவடிக்கை" -உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

x

புதுக்கோட்டையைச் சேர்ந்த கௌதீன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை வெட்டியதாகவும் சட்டவிரோதமாக அவற்றை விற்பனை செய்த முருகேசன் என்பவர் மீது உரிய நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டாரி நீதிபதி சந்திரசேகரன் அமர்வு, இந்த வழக்கை பொறுத்தவரை சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து மரத்தை வெட்டியவர் மீது உரிய நடவடிக்கை கோரி தொடுக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலின் போது வேரோடு சாய்ந்த மரங்களையும் மின் வயர்களின் மீது சாய்ந்த மரங்களையும் கிராமத்தினர் அகற்றியுள்ளனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது அனுமதியின்றி யாரும் மரம் வெட்டவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சட்டவிரோதமாக மரத்தை வெட்டியவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.

வரும் காலங்களிலும் உரிய அனுமதியின்றி மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது. அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்ட விரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்