பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

x

பிஎஸ்என்எல் ஊழியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் இல்லை என்றால் வெளியேறுங்கள் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எச்சரித்துள்ளார். 62 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்க, ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்குவதாக ஜூலை 27ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த‌து. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், திறம்பட பணியாற்றி நிறுவனத்தை சிறப்பாக உயர்த்த வேண்டும் என்றார். தவறினால், வீஆர்எஸ் வாங்கிக் கொண்டு வெளியேறுங்கள் என எச்சரித்துள்ளார். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்