தமிழக கூட்டுறவு வங்கிக்கு சிறப்பாக செயல்பட்டதாக கூறி, மத்திய அமைச்சர் அமித்ஷா விருது வழங்கினார்.

x

சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகள்

டிஎன்எஸ்சி கூட்டுறவு வங்கிக்கு விருது

சேலம், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விருது

மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கினார்

தமிழக கூட்டுறவு வங்கிக்கு சிறப்பாக செயல்பட்டதாக கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விருது வழங்கினார்.

ஊரக கூட்டுறவு வங்கிகளின் தேசிய கருத்தரங்கத்தை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு துறை அமைச்சருமான அமித்ஷா துவக்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு அமைப்புகள் மற்றும் வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய அமித்ஷா, நாட்டின் பொருளாதாரத்தை ஊரக இந்தியாவோடு இணைப்பதில் ஊரக கூட்டுறவு வங்கிகள் மிக முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பாக சேவையாற்றிய கூட்டுறவு வங்கிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா விருது வழங்கினார். அதன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்டதற்காக TNSC வங்கி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும் நூறு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவையாற்றிய முதல் மாநில கூட்டுறவு வங்கிக்கான விருதும் அந்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

இந்த இரண்டு விருதுகளையும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் அந்தோணிசாமி ஜான் பீட்டர் பெற்றுக் கொண்டார்.

மேலும் பொது மக்களுக்கு நூறு ஆண்டு சேவைகளை நிறைவு செய்வதற்காக சேலம், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்