"பீகாரில் விரைவில் ஆட்சி கவிழும்" - அமைச்சர் அமித்ஷா | BJP | Amit Shah | Bihar
பீகாருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, நவாடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது,மீண்டும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி என்ற பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பீகார் முழுவதும் தாமரை மலர போவதாக கூறினார். அதன் பிறகு பீகாரின் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி கவிழும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நிதிஷ் குமார் ஒருநாளும் பிரதமராக போவதில்லை என்றும் தேஜஸ்வி யாதவ் ஒரு நாளும் முதல்வராக போவதில்லை என்றும் விளாசிய அவர், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் அமைச்சர்கள் பாஜகவின் கதவை தட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.
Next Story