இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல்... வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? - நடுத்தர வர்க்க குடும்பத்தினர் எதிர்பார்ப்பு
2023 - 24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் நீண்டகால கோரிக்கையான, வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்பை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர், தானும் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவள்தான் என்பதால், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, தன்னால் புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோரிக்கை நிறைவேறுமா? என்பது பட்ஜெட்டில் தெரியவரும்...